shokkuddy
November 16, 2008, 06:44 PM
எனது இந்தக் கருத்து நீயா நானா குழுவின் பார்வைக்கு வரும் என நம்பி எழுதுகிறேன்:
நான் ஒரு இலங்கைத்தமிழன். நானும் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதுண்டு. பொதுவாக தமிழ் படங்களில் போலீசார் ஒரு குண்டூசியை நகர்த்தக்கூட மேலிடத்து உத்தரவு வேண்டும் என்பது போல் காட்சிகள் வரும்போதெல்லாம் எள்ளி இயக்குனர்களின் அறிவை எண்ணி எள்ளி நகையாடி இருக்கிறேன். ஆனால் அம்பேத்கர் கல்லூரியில் நடந்த சம்பவம் தமிழ் சினிமா உண்மைக்கு அருகில் இருப்பது போலல்லவா இருக்கிறது.
ஐயா, கடந்த மூன்று வருடங்களாக கனடா நாட்டில் வசித்து வருகிறேன். எனக்கு இங்கே இருக்கிற இளம் தமிழர்களையும், இருபது வருடங்களாக என்னுடன் தமிழீழத்தில் வாழ்ந்த என் வயதொத்த தமிழர்களையும், நீயா நானாவில் வீர வசனம் பேசும் இளம் தமிழ் கன்றுகளையும் பார்க்கும் போது நிச்சயமாக காட்டுமிராண்டித்தனம் அறவே அற்ற அற்புதமான எதிர்காலம் பற்றிய கனவுகள் அடிக்கடி தோன்றும். அம்பேத்கர் கல்லூரி நிகழ்வுகள் அக்கனவுகள் நனவே ஆகாது என அறுதியிட்டு காட்டியுள்ளன. தமிழர்களிடையே இன்னமும் காட்டுமிராண்டித்தனம் நிறையவே இருக்கிறது.
நீயா நானாவின் ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் எமது கல்வி முறை பிள்ளைகளை தொழிலுக்கு தயார் படுத்துகிறதே ஒழிய அவர்களுக்கு பண்பாட்டு விழுமியங்களும் சமூக தர்மங்களும் ஒழுக்க நெறியும் கற்பிக்கப் படுவதில்லை என ஞானி அவர்கள் சொன்ன கருத்து எவ்வளவு நிஜம் பாருங்கள். இதற்கு மூல காரணமே எம்மை ஆளும் அரசுகள் எப்போதுமே காட்டுமிராண்டிகளாகவே இருக்கின்றன, இருந்து வந்திருக்கின்றன. இதை எப்படி மாற்றலாம் என்று 100 நீயா நானா எபிசோடுகளே நடத்தலாம் என்பது வேறு விடயம். ஆனால் எனது ஒரே ஒரு ஆசை அம்பேத்கர் கல்லூரி வன்முறை போல இனிமேல் நடக்கவே கூடாது என்பதற்கு புதிய கருத்துக்களை கேட்டறிவதற்கு இரண்டு மூன்று எபிசோடுகள் நடத்தலாமே?? ஏனெனில் மற்ற எல்லா முறைகளை விட நீயா நானா மூலமாக சொல்லப்படும் நல்ல செய்திகள் மக்களை மிக விரைவில் சென்றடைகின்றன என்பது எனது தாழ்மையான கருத்து.
பி:கு: இந்த காட்டுமிராண்டிகளை என்னை தண்டிக்கச் சொன்னால் அவர்களின் குடியுரிமையை பறித்து கடலில் விட்டு விடுவேன். (ஓரளவுக்கு நாகரிகம் கல்ந்த தண்டனையாக இது தான் படுகிறது). சீ....ஏன் தண்டிக்க வேண்டும்....திருத்த வழி தேடுவோமே. கோபியும் நீயா நானா குழுவும் எனது கருத்துக்கு எதாவது முறையில் உருவம் கொடுப்பார்கள் என நம்புகிறேன். வாழ்க தமிழ்.